இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் AI தொழில்நுட்பம் உள்புகுந்துள்ளது. தற்போது தெரியாத நபரிடமிருந்து செல்போனில் வரக்கூடிய அழைப்புகளை அடையாளம் காண உதவும் ட்ரூ காலர் செயலியில் AI தொழில்நுட்பம் வந்துவிட்டது. இதன் மூலமாக வரக்கூடிய அழைப்புகளுக்கு சொந்தக் குரலில் பதிலளிக்கலாம். இந்த புதிய அம்சம் மைக்ரோசாப்ட் தொழில்நுட்பத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதில் பயணங்கள் தங்களுடைய விருப்பத்தின் படி தயார் செய்த பதில்களை அழைப்புகளுக்கு கொடுக்கலாம்.

அதாவது நீங்கள் செல்போனை எடுக்க முடியாத சூழ்நிலையில் இருந்தால் உங்களுக்கு வரும் அழைப்புகளுக்கு உங்களுக்கான பதிலாக உடனடி பதில்களை AI கொடுக்கும். இந்த புதிய தொழில்நுட்பத்தில் உங்கள் குரலை செயற்கையாக நீங்கள் உருவாக்கலாம். இருந்தாலும் முறையாக கட்டணம் செலுத்தி பதிவு செய்த பிறகு இந்த தொழில்நுட்பம் உங்களுக்கு கிடைக்கும். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, சுவீடன் மற்றும் சிலி ஆகிய நாடுகளில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகின்றது.