தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கனா என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை அருண் ராஜா காமராஜ் இயக்கியிருந்த நிலையில் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி படம் உருவாகியிருந்தது.

இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி வேடத்தில் நடித்திருந்த நிலையில் கிரிக்கெட் வீராங்கனைகள் பலரும் படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் சஜானா சஜீவன் என்ற கிரிக்கெட் வீராங்கனை நடித்திருந்தார். இவர் தற்போது இந்திய மகளிர் அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி வங்காளதேசம் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறார். மேலும் இவருக்கு தற்போது பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.