
இந்தியன் ஆயில் நிறுவனம் எரிவாயு சிலிண்டர்களை இண்டேன் என்ற பெயரில் சப்ளை செய்து வருகிறது. வாடிக்கையாளர்கள் சிலிண்டர் புக் செய்த ரெண்டு மூன்று நாட்களுக்குள் இன்டேன் சிலிண்டர்களை அதன் ஏஜென்சிகள் சப்ளை செய்து வருகிறார்கள். கிராம பகுதிகளில் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை ஆகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக சப்ளை செய்யும் காலக்கடுவை குறைத்திட வேண்டும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.
அந்தவகையில் கேஸ் சிலிண்டர் புக் செய்வோருக்கு ஒரே நாளில் டெலிவரி செய்ய வேண்டும் என்று ஏஜென்சிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் Indane என்ற பெயரில் பெரும்பாலான வீடுகளுக்கு கேஸ் சப்ளை செய்கிறது இந்தியன் ஆயில் நிறுவனம். அவர்களது சேவையை மெருகேற்றும் பொருட்டு, இனி ஞாயிற்றுக் கிழமைகளிலும் அவர்கள் கேஸ் டெலிவரி செய்ய இருக்கின்றனர்.