திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 15ஆம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்க இருக்கிறது. இதனை முன்னிட்டு சிறப்பு தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது   புரட்டாசி மாசம் என்றதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு பலரும் கோயிலுக்கு தரிசனத்திற்காக வருகை புரிவார்கள் என்பதனால் அனைவரும் சாமி தரிசனம் செய்யும் விதமாக சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் இலவச  தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்ய முடியும். இந்த பிரமோற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க இருக்கிறது. சென்னையில் இருந்து மட்டும் திருப்பதிக்கு 90 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.