மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன், பின்  விஸ்வாசம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் அஜித்குமாரின் மகளாக நடித்தார். இப்போது “புட்டபொம்மா” எனும் தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் அனிகா. இந்நிலையில்  அனிகா சுரேந்திரன் பேட்டி அளித்தபோது “குழந்தை நட்சத்திரமாக அனைவரின் மனதில் இடம் பிடித்தேன். தற்போது இன்னொரு சிறப்பம்சமாக கதாநாயகி ஆகி உள்ளேன்.

புட்டபொம்மா மலையாளத்தில் வெளியாகிய “கப்பெலா” படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.  எனக்கு நடிப்பு எனில் மிகவும் இஷ்டம். சிறுவயதில் இருந்தே மம்முட்டி, அஜித், நயன்தாரா, மம்தா மோகன்தாஸ் ஆகிய முன்னணி நடிகர்-நடிகைகளோடு பணியாற்றியதால் அவர்களிடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். எனக்கு உணர்வுப்பூர்வமான கதை அம்சம் உள்ள திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் இருக்கிறது” என்று கூறினார்.