நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. சிறிது நாட்கள் படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டுள்ளது. அஜித் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் புத்தாண்டை துபாயில் கொண்டாடினார்.

இந்நிலையில் துபாயில் நடிகர் அஜித்தை பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்தவகையில்  சமீபத்தில் அஜித்துடன் ரசிகர் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.