
பிரபல நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு உயிர், உலக் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் தான் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் திருமண ஆவணப்படம் ரிலீஸ் ஆனது. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்த படத்தை தயாரித்தது தனுஷ்.
கோலிவுட் வட்டாரத்தில் தனுஷ் நயன்தாரா இடையே ஏற்பட்ட சண்டை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றனர். சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும் நயன்தாரா தனது வேலையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் விக்கி தனது சமூக வலைதள பக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் இடம் பெற்ற “தங்கமே உன்னத்தான் தேடி வந்தேன் நானே” என்ற பாடலுக்கு தனது இரட்டை மகன்கள் கொடுத்த ரியாக்ஷனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram