பாகிஸ்தானில் 2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த F-16 விமான விபத்துக்கான செய்தியை நேரலைக் காட்சியில் வாசித்த செய்தி வாசிப்பாளர் ஒருவர், “விமானி ejaculation செய்யவில்லை” என தவறாக கூறியதால் அந்த வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் தீவிரமாக பகிரப்பட்டு வருகிறது. அவர் உண்மையில் “ejection” என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டியிருந்தது. இந்த வார்த்தைப் பிழை பலரிடமும் குழப்பத்தையும் நகைச்சுவையையும் உருவாக்கியுள்ளது.

அதாவது இந்த வார்த்தைக்கு விந்து வெளியேறுதல் என்பது பொருளாகும். இது பெரும்பாலும் மருத்துவம்  மற்றும் பாலியலில் பயன்படுத்தப்படும் சொல். ஆனால் அந்த செய்தியாளர் தவறுதலாக விமான விபத்துக்கு இந்த வார்த்தையை பயன்படுத்தி விட்டார்.

இந்த சம்பவம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அருகே 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. அப்போது விமானி நௌமான் அக்ரம் தனது விமானம் கட்டுப்பாட்டை இழந்தபோதும், மக்கள் அடர்ந்த பகுதியில் விழாமல் காட்டுப் பகுதிக்கு மாற்றி, தனது உயிரை தியாகம் செய்தார். இந்த செய்தியை நேரலைக் காட்சியில் விவரிக்கும்போது செய்தி வாசிப்பாளர் செய்த வார்த்தைப் பிழை, தற்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் எதிர்வினையை எதிர்நோக்கி உள்ள சூழ்நிலையில் மீண்டும் வைரலாகியுள்ளது.

 

இந்நிலையில், அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “Most jahil country for a reason” எனப் பதிவிட்டுள்ளனர். அதன்பிறகு “இவர்கள் நம்ம நாட்டுடன் போர் நடத்தப் போறாங்களா?” என பதிவிட்டுள்ளார். ஒரு செய்தி வாசிப்பாளரின் வார்த்தைப் பிழை, ஒரு தேசிய விமான விபத்து செய்தியை நகைச்சுவையாக மாறச்செய்துள்ளது என்பதும், அதற்கான விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.