சுற்றுப்புற சுத்தம் குறித்து இந்தியர்கள் மீது அடிக்கடி எழும் குற்றச்சாட்டை மீண்டும் நினைவூட்டும் விதமாக, வாரணாசியில் இருந்து ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரு குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் குடும்பம், பயன்படுத்திய குழந்தை டயப்பர்களை பொது குப்பைத்தொட்டிக்கு வீசாமல், தங்கள் பால்கனி அருகே உள்ள மரத்திலேயே கொட்டிவருவது அந்த வீடியோவில் வெளியாகியுள்ளது.
பயன்படுத்தப்பட்ட டயப்பர்கள் மரக்கிளைகளை மூடிவிடும் அளவிற்கு தேங்கியிருந்ததால், அக்காட்சி நெட்டிசன்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த குடியிருப்பாளர், குடும்பத்தினர் வெளியில் குப்பை கொட்டுவதைக் கண்டித்ததோடு, மற்றொரு பெண்ணும் அதே மரத்தில் குப்பை வீச வந்ததை வீடியோவில் பதிவு செய்துள்ளார். “இவர்களே தங்கள் குழந்தைக்குக் கட்டியெழுப்பும் எதிர்காலம் இது தானா?” என்று அவர் கடும் விமர்சனம் செய்தார்.
Diaper Tree of Varanasi. pic.twitter.com/ooBl4Aij8K
— Piyush Rai (@Benarasiyaa) December 3, 2025
இந்த வீடியோ ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டு, குடும்பத்தின் பொறுப்பின்மையை நெட்டிசன்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூகப் பணியாளர்கள், பொதுப்பெண்கள்எல்லோரும் இந்த வீடியோவை கடும் விமர்சனத்துடன் எதிர்கொண்டுள்ளனர்.
இது இயற்கைச் சூழலுக்கு ஏற்படும் தீங்கையும், பலரிடமுள்ள குடிமைப் பொறுப்பின்மையையும் வெளிக்கொணருகிறது எனக் கருத்து தெரிவித்தனர்.
ஒரு பயனர், “குடிமை உணர்வு பூஜ்ஜியம், ஆனாலும் குழந்தை பிறக்கச் செய்யத் தயார்!”
என்று டயப்பர் மரத்தை கண்டித்தார். மற்றொருவர், “நாம் எவ்வளவு படித்திருந்தாலும், மூன்றாம் வகுப்பு மனநிலை போகவே போகாது” என்று கடும் விமர்சனம் செய்தார். மற்றொரு பெண் பயனர்,
“இதுதான் பிளாஸ்டிக் டயப்பர்கள் குழந்தைகளுக்கும் பூமிக்கும் எவ்வளவு நச்சு என்பதைப் பற்றிய வீடியோ செய்ய என்னைத் தூண்டியது” என்று குறிப்பிட்டார்.
View this post on Instagram
ஒரு தாய் தனது அனுபவத்தை பகிர்ந்து, தன் மகளுக்கு துணி டயப்பர்களைப் பயன்படுத்தியதாகவும், பிளாஸ்டிக் டயப்பர்கள் சுற்றுச்சூழலுக்கும் குழந்தைகளுக்கும் மிகுந்த தீங்கு விளைவிப்பதாகவும் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: “நான் மட்டும் உலகத்தைக் காப்பாற்றப் பார்க்கிறேன் என்று சொல்லி ஏராளமானோர் எனக்கு சொற்பொழிவு செய்தனர். இருந்தாலும் துணி டயப்பர்களைப் பயன்படுத்தும் என் முடிவை நான் மாற்றவில்லை”.
