ஒரு பெண் எஸ்கலேட்டர் (தானியங்கி படிக்கட்டு) பயன்படுத்தும் போது, நடந்த சம்பவமொன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், புடவை அணிந்த ஒரு பெண் எஸ்கலேட்டரில் ஏறும்போது சமநிலையை இழந்ததோடு, உதவிக்காக வந்த நபரும் படிக்கட்டில் விழுந்து காயமடைந்த காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று பொது இடங்களில் எஸ்கலேட்டர்கள் வழக்கமான வசதிகளாக பயன்படுத்தப்பட்டாலும், அவற்றை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதனை சுட்டிக்காட்டும் வகையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சமூக ஊடகத்தில் பரவும் இந்த வீடியோவில், புடவை அணிந்த ஒரு பெண் எஸ்கலேட்டரில் ஏற முயல்கிறார். ஆரம்பத்தில் பயமாக இருந்தாலும், தொடர்ந்து பயணிக்கிறார். எனினும், எஸ்கலேட்டரின் நகரும் வேகத்துடன், சமநிலையை இழக்கிறார். உடனே அருகிலிருந்த ஒருவர் அவருக்கு உதவ முனைந்தபோது, இருவரும் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுகிறார்கள். இந்தக் காட்சியை பார்த்த அங்கு இருந்தவர்கள் சிரித்து விடுவதாகவும் காணப்படுகிறது.
இந்த வீடியோ, X தளத்தில் @MdZeyaullah20 என்ற பயனர் மூலம் பகிரப்பட்டது. வெளியான சில மணி நேரங்களில், இது ஆயிரக்கணக்கான பார்வைகளையும், நூற்றுக்கணக்கான கருத்துகளையும் பெற்றுள்ளது.
ஒரு பயனர், “சகோதரரே, இது அவர்களுக்கு நடந்ததற்காக வருந்துகிறேன், ஆனால் இந்தக் காட்சியைப் பார்த்ததும் சிரிக்க வேண்டியதாகிவிட்டது” என தெரிவித்துள்ளார். மற்றொருவர், “எஸ்கலேட்டரில் இதைப் போல் யார் செய்கிறார்கள்?” எனப் பதிவிட்டுள்ளார்.
ये Scene देखकर तो Escalator भी बोल रहा होगा,
मैं क्या करूं, जॉब छोड़ दूं? 🤣 pic.twitter.com/B32uRfY0Xh
— Md Zeyaullah🇮🇳 (@MdZeyaullah20) August 30, 2025
இதேவேளை, சிலர் இதனை பொது இடங்களில் பாதுகாப்பு விழிப்புணர்வு தேவை என்பதற்கான எடுத்துக்காட்டு என்றும், எஸ்கலேட்டர் போன்ற இயந்திர வசதிகளைப் பயன்படுத்தும் முறையில் வழிகாட்டுதல் முக்கியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இவ்வாறு தோன்றும் வீடியோக்கள் பொழுதுபோக்கு அம்சத்துடன் காணப்படுகின்றபோதிலும், அவை பாதுகாப்பு குறித்த சிந்தனையையும் ஏற்படுத்த வேண்டியதாய் இருக்கின்றன.
