உலக அளவில் கோடி கோடியாக பணத்தை கொள்ளையடித்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அப்படி இருக்கும் சமயத்தில் வெறும் ‌ரூ.25 பைசா எடுப்பதற்காக வங்கிக்கு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் வங்கி ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கியில் மைக்கேல் பிளமிங் (41) என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இவர் பணம் எடுக்கும் ரசீதை நிரப்பி கொடுத்த நிலையில் அதில் தனக்கு 1 சென்ட் காசு வேண்டும் என்று எழுதியிருந்தார்.

இதில் ஒரு சென்ட் என்பது இந்திய மதிப்பில் வெறும் 0.024 பைசா ஆகும். இந்த ரசீதை கவுண்டரில் இருந்த அதிகாரியிடம் அவர் கொடுத்தார். இதைப் பார்த்து அதிர்ச்சடைந்த அதிகாரி இவ்வளவு சிறிய தொகையை கொடுக்க முடியாது என்று கூறினார். இதனால் பொறுமையை இழந்த மைக்கேல் ‌ அந்த அதிகாரியிடம் என்னை வேறு மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்த வைக்காதீர்கள் என்று மிரட்டும் தோணியில் பேசியுள்ளார். இதனால் பயந்து போன அதிகாரி உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மைக்கைலே கைது செய்தனர். மேலும் அவர் மீது மிரட்டல் மற்றும் வங்கி அதிகாரி மீது தாக்குதல் நடத்த தயாராக இருந்தது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.