
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முளங்குழி வார விளை பகுதியில் பிரகாஷ்-ஜாஸ்மின் ஷைனி என்ற தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அபிஷேக் என்ற 16 வயது மகன் இருக்கும் நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பகுதியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவன் தற்போது பிளஸ் 1 தேர்வு எழுதியுள்ள நிலையில் கோடை விடுமுறை என்பதால் நண்பர்களுடன் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அபிஷேக் சம்பவ நாளில் தன்னுடைய நண்பர் ஒருவருடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில் ஒரு மாமரத்தில் ஏறி மாம்பழங்களை பறிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மாமரத்தின் கிளை முறிந்து விழுந்ததால் அபிஷேக் தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அபிஷேக்கை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அங்கு மாணவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.