
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவரை ரசிகர்கள் புன்னகை அரசி என்று அழைத்தனர். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி சினிமாவிலும் நடித்துள்ளார். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு நடிகை சினேகா படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்யின் கோட் படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் பிரசன்னா தனது மனைவி சினேகாவிற்கு ஓசிடி பிரச்சினை இருப்பதாகவும், அதனால் மூன்று முறை வீட்டை மாற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார். சினேகா கூட சமீபத்தில் அளித்த பேட்டியில், எப்போதும் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக கிச்சன் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவ்வளவு தான் என்று கூறியுள்ளார். ஓசிடி என்பது அதிகம் கோபம் வரக்கூடிய ஒரு பிரச்சினை ஆகும்.