மிக்ஜாம் புயல் கரையைக் கடந்துள்ள போதிலும், சென்னையில் ஏற்பட்டுள்ள அவல நிலை மாறவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், 25 லிட்டர் கேன் தண்ணீர் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீரால் சூழ்ந்துள்ளன.

குடிநீர், உணவு போன்ற அடிப்படை வசதிகள் பல இடங்களில் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், மினி லாரிகளில் சென்று சிலர் குடிநீர் விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி, 25 லிட்டர் கேன் ஒன்று ரூ.250-க்கு விற்பனை செய்கின்றனர். வீடுகளில் இருந்து காலி கேன்களை கொண்டு வருபவர்களுக்கு, ரூ.150-க்கு குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது.