கேரள மாநிலம் கண்ணூர் அருகே ‌ கோனோடு அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு ஷீபா (36) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ம் தேதி குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் வைத்து பால் காய்ச்சி கொடுத்துள்ளார். அப்போது சூடான பாலை ஆற வைக்காமல் 5 வயது சிறுவனின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த சிறுவனுக்கு வாயில் படுகாயம் ஏற்பட்டது. இருப்பினும் மருத்துவமனையில் சிறுவனை அனுமதிக்க கூட நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிறுவர் உரிமை கமிஷன் தற்போது தானாக முன்வந்து வழக்கு செய்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அங்கன்வாடி ஊழியரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.