பிரபல ஹிந்தி நடிகை பாக்கியஸ்ரீ. இவர் ஹிந்தியில் சல்மான் கானோடு “மைனே பியார் கியா” என்ற படத்தில் அறிமுகமானார். அதுமட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவியில் ஜெயலலிதாவின் தாயாக நடித்திருந்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பிக்கிபால் விளையாட்டில் பங்கு பெற்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு  அதிகமாக ரத்தம் வடிந்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு நெற்றியில் 13 தையல் போடப்பட்டுள்ளது. தற்போது அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இதனையடுத்து ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.