
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பதாயூன் மாவட்டத்தில் நூர்பூர் பினானு கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த தீக்ஷா என்ற 22 வயது இளம்பெண்ணுக்கு மொரதாபாத் பகுதியைச் சேர்ந்த சவுரப் என்ற இளைஞருடன் நேற்று திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தீக்ஷா தன் சகோதரிகளுடன் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் தன்னுடைய அறைக்கு சென்று ஓய்வெடுக்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
बदायूं
⏩ “जिस घर में गूंजनी थी शहनाइयाँ, वहाँ गूंज उठा सन्नाटा…”
⏩ हल्दी की रस्म के बाद डांस करते समय अचानक थम गई दुल्हन की सांसें, आज ही आनी थी बारात।
⏩ शादी से पहले दुल्हन की मौत ने छीन ली सारी खुशियां, परिवार में पसरा मातम |
⏩ सात फेरों के सपने संजोए दुल्हन की डोली… pic.twitter.com/Qqj4Xkp1bV
— हिन्दी ख़बर | Hindi Khabar 🇮🇳 (@HindiKhabar) May 5, 2025
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் தீக்ஷா வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். பின்னர் அவரை குடும்பத்தினர் எழுப்ப முயன்ற போதுதான் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.