மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சியோபூர் மாவட்டத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது பிரதீப் ஜாட் என்ற 25 வயது வாலிபருக்கு நேற்று முன்தினம் இரவு திருமணம் நடைபெற இருந்தது. மணமகனை குதிரையில் ஊர்வலமாக அழைத்து வந்த பிறகு அவரை குதிரையிலிருந்து இறங்குமாறு கூறினார். அவர் குதிரையிலிருந்து இறங்க முயற்சி செய்த நிலையில் திடீரென குதிரையிலையே சாய்ந்து மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் சமீபகாலமாக இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் நிலையில் தற்போது திருமணம் நடைபெறவிருந்த நாளில் மணமகன் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.