ஒடிசாவில் உள்ள கெண்டுஜார் மாவட்டத்தில் உள்ள பாரிகான் கிராமத்தில் சோகமான சம்பவம் நடந்துள்ளது. சமர முண்டா (54) என்ற நபருக்கு வெள்ளிக்கிழமை தொலைபேசி அழைப்பு வந்தது. இவரது சகோதரர் கண்டே முண்டா (57) மற்றும் சகோதரரின் மகன் லக்ஷ்மன் (35) ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்தியைக் கேட்டவுடனேயே சமர முண்டா நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் கிராம மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.