
நியூ ஜெர்சியில் உள்ள ஸ்டாக்ஹோம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் லூசி மோர்கன்(6) என்ற சிறுமி .இவர் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று தன்னுடைய குடும்பத்தோடு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்கு தன்னுடைய சகோதரனுடன் பேட்மிட்டன் கேம் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.
அப்பொழுது லூசி சகோதரரின் கையில் இருந்த பேட்மிட்டன் பேட்டின் அலுமினிய தகடானது மரபிடியிலிருந்து கழன்று சிறுமியின் தலையில் விழுந்துள்ளது. இதில் கூர்மையான அலுமினிய தகடு அந்த சிறுமியின் மண்டை ஓட்டில் சிக்கியுள்ளது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.