தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்குமார், நடிப்பைத் தாண்டி கார் பந்தயங்களிலும் சர்வதேச அளவில் முத்திரை பதித்து வருகிறார். தற்போது ‘குட் பேட் அக்லி’ மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலான படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளார்.
‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எல்.எல்.சி.’ என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ள அவர், அதற்காக இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ரூபாய் செலுத்தி ஆயுட்கால உறுப்பினராகவும் இணைந்துள்ளார்.அஜித்தின் இந்த புதிய அவதாரம் அவரது ரசிகர்களுக்குப் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.
அதே சமயம், அவர் முழுநேரத் தயாரிப்பாளராக மாறினால் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா என்ற கவலையும் சிலரிடையே எழுந்துள்ளது. சமீபகாலமாக கார் பந்தயம், துப்பாக்கிச் சுடுதல் எனப் பல்வேறு துறைகளில் ஆர்வம் காட்டி வரும் அஜித்தின் இந்த அடுத்தடுத்த அதிரடி முடிவுகள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே ஒரு சுவாரஸ்யமான புதிராகவே பார்க்கப்படுகிறது.
