இந்தியாவில் பெண்களுக்கு ஏற்ப அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. பெண்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு தீவு அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் அதிகம் அளவில் வசிக்கும் பகுதிகள், ஐடி நிறுவனம் பகுதியில், பாதுகாப்பற்ற பகுதியில், இந்த பாதுகாப்பு தீவு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக பாதுகாப்பு இல்லாமல் பெண்கள் உணரும் பொழுது இயந்திரத்தின் பக்கத்தில் உள்ள சிவப்பு பட்டனை அழுத்தினால் போதும். அதன் மூலம் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் கனெக்ட் செய்யப்பட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதனால் ஆபத்தில் உள்ள பெண்களுக்கு காவல்துறையால் உதவ முன்வர முடியும்.