தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராதிகா சரத்குமார். இவருக்கு தற்போது காலில் அடிபட்டுள்ளதால் அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் நடிகை ராதிகா சரத்குமார் ஓய்வெடுக்கிறார். இந்நிலையில் காலில் காயத்தால் அவதிப்படும் நடிகை ராதிகாவை நடிகர் சிவகுமார் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவை நடிகை ராதிகா சரத்குமார் தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை ராதிகா சரத்குமார் விரைவில் குணமாக வேண்டும் என கூறி வருகிறார்கள்.