நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்தில் நடித்த சம்யுக்தா தெலுங்கு திரை உலகிலும் பிரபலமானார். இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லு இயக்கிய படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் சம்யுக்தா பேசியிருந்தார். அதில் மலையாள சினிமாவில் நடிக்கும் போது மேக்கப்பிற்கு முக்கியத்துவம் இருக்காது. அப்படித்தான் நடித்து பழகி இருந்தேன்.

ஆனால் தெலுங்கில் நடிக்கும் போது மேக்கப் தான் முக்கியம் என சொன்னார்கள், அதனால் ஷாட்டுக்கு தயாராகி நடிக்க நின்றால் ஏதோ சரியில்லை என சொல்லி சரி செய்ய சொல்வார்கள். அதில் திரைப்பட வசனம் அனைத்தையும் மறந்து விடுவேன் என தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் மேக்கப்-க்கு மட்டுமே முக்கியத்துவம் என்ற நிலை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டி பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.