இந்திய ராணுவத்தில் அக்னி வீரர்களாக மாறுவது எளிதானதல்ல. ராணுவத்தில் அக்னி வீரராக தேர்வாக எழுத்து தேர்வு, விளையாட்டு தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் இனி மனநல சோதனையிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அக்னி வீரராக ராணுவத்தில் பணியாற்ற தகுதி பெறுவார்கள். அதாவது அக்னி வீரர் ஆட்சேர்ப்பில் முதன் முறையாக இந்த தேர்வு இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். புதிய சட்டத்தின் படி ஒவ்வொரு விண்ணப்பதாரரும் உளவியல் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இதற்காக ராணுவத்தில் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையின் போது இந்த சோதனை செய்யப்படும் எனவும் இதனைத் தவிர இராணுவத்தில் மற்றொரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ராணுவ வீரர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தத்தை குறைக்க ஒரு சிறப்பு மனநல ஆதரவு பிரசாரம் மான்சா தொடங்கப்பட்டுள்ளது.