
பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா மாவட்டத்தில் நர்பட்கஞ்ச் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு தாய் தன்னுடைய இளைய மகளை கொலை செய்ய கூலிப்படையை ஏவியுள்ளார். அதாவது அவருக்கு இரு மகள்கள் இருக்கும் நிலையில் மூத்த மகளின் கணவனை இளைய மகள் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளார். தன் அக்காவின் கணவரையே அவர் திருமணம் செய்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதனால் குடும்பத்தினருக்கு மிகவும் அவமானம் ஏற்பட்டதாக அந்த தாய் நினைத்து தன் மகளை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
இதனால் தயார் தன் இளைய மகளை கொலை செய்ய திட்டமிட்டு கூலிப்படையை ஏவினார். இவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அந்த பெண்ணை துப்பாக்கியால் பலமுறை சுட்ட நிலையில் இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் போலீசார் கூலிப்படையை சேர்ந்த சிலரை கைது செய்துள்ளனர். அதோடு கொலைக்கு திட்டமிட்ட பெண்ணின் தாயார் மற்றும் அக்காவையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.