இந்தியாவில் அனைத்து வங்கிகளிலும் வைப்பு நிதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு வங்கியையும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத வட்டியை வழங்குகிறது. அதற்கு ஏற்றது போல மக்கள் பணத்தை டெபாசிட் செய்யலாம். 2024 ஆம் ஆண்டு தொடங்கிய பிறகு பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தியுள்ள நிலையில் அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதன்படி பஞ்சாப் நேஷனல் வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை 80 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. இதில் 300 நாள் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 6.25 சதவீதத்திலிருந்து 7.05 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது.

பெடரல் வங்கி 500 நாட்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7.75 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ஐடிபிஐ வங்கி ஏழு முதல் 10 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு 7 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த உயர்த்தப்பட்ட புதிய வட்டி விகிதம் ஜனவரி 17ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.

அடுத்ததாக பேங்க் ஆப் பரோடா வங்கி இரண்டு கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிக வட்டி விகிதம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.10 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீதமும் வட்டி வழங்கப்படுகின்றது.