வாகனங்களுக்கு ஜிபிஎஸ் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு பிப்ரவரி மாதம் முதல் சோதனை செய்ய உள்ளது. தற்போது பாஸ்ட் டேக் மூலம் சுங்கவரி செலுத்துவது நடைமுறையில் உள்ள நிலையில் இந்த முறையில் நீங்கள் சிறிது தூரம் நெடுஞ்சாலையை பயன்படுத்தினாலும் முழு கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனால் GPS Toll முறையில் நீங்கள் பயணிக்கும் தொலைவிற்கு மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதும்.