இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் “வாரிசு”. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து உள்ளார். மேலும் சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் இந்த படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிச,.24 ஆம் தேதி நடைபெற்றது. மேலும் இசை வெளியீட்டு விழாவை சன் தொலைக்காட்சி நேற்று முன்தினம் ஜன,.1 ஒளிபரப்பியது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறிய கருத்து தற்போது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

விஜய்யின் உடை நன்றாக இருந்தது என பலரும் கூறிய நி

லையில், இவர் மாறுப்பட்ட கருத்தை கூறியுள்ளார். அதாவது ஜேம்ஸ் வசந்தன் கூறியதாவது “வாரிசு பட இசை விழா டிவியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப் பார்த்தபோது, விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே விஜய் தோற்றம் மனதை சற்று நெருடியது. தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழா மேடைக்கேற்ற உடை அணிந்திருக்கலாம் என தோன்றியது” என்று கூறினார்.