தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்திற்கு பல விருதுகள் குவிந்தது. அதன் பிறகு நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்களை விட வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் படங்களுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. வில்லனாக கலக்கி வரும் விஜய் சேதுபதிக்கு தமிழில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. பாலிவுட் சினிமாவில் 3 படங்களில் நடித்துவிட்டு விஜய் சேதுபதி அடுத்ததாக ஒரு வெப்சீரிசில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரை இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டி.கே இயக்கியுள்ளனர். இந்த வெப் தொடர் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து முக்கிய ரோலில் பாலிவுட் நடிகர் சாகித் கபூர் நடித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள வெப் தொடரின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பட குழு தீவிரம் காட்டி வரும் நிலையில் நடிகர் சாகித் கபூர் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டாததாக கூறப்படுகிறது. அதாவது விஜய் சேதுபதிக்கு தான் அதிக முக்கியத்துவம் இருப்பதாகவும் ஷாகித் கபூருக்கு முக்கியத்துவம் இல்லாததால் வெப் தொடரின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டாததாக கூறப்படுகிறது. ஆனால் பட குழு முற்றிலும் இந்த தகவலை மறுத்ததுடன் விஜய் சேதுபதியுடன் இணைந்து சாகித் கபூர் பேட்டி கொடுக்க விரும்புவதாக தங்களிடம் சொன்னதாக தெரிவித்துள்ளனர். மேலும் ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைபெறும் போது தான் இந்த தகவல்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரிய வரும்.