பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இப்போது அட்லீ டைரக்டு செய்யும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, தீபிகா படுகோனே போன்றோரும் நடிக்கின்றனர். மேலும் அவர் நடித்திருக்கும் பதான் திரைப்படம் இம்மாதம் இறுதியில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் ஷாருக்கான் தனது சமூகவலைதளபக்கத்தில் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் விருது பெற்றால் அதனை தன்னிடம் ஒரு முறை தருமாறும், அதை தொட்டுப் பார்க்க வேண்டும் என்றும் ராம்சரணிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு  ராம்சரண், நிச்சயமாக சார். விருது பெற்றால் அது இந்திய சினிமா உடையது என அவருக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.