கன்னடத்தில் வெளியாகி உலக அளவில் ஹிட்டான கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்களை இயக்கியவர் பிரசாந்த் நீல். இவர் தற்போது நடிகர் பிரபாஸுடன் இணைந்து சலார் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் தற்போது சோசியல் மீடியாவில் இருந்து திடீரென விலகி விட்டது கன்னட ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சமீபத்தில் கேஜிஎப் நாயகன் யஷ்ஷு-க்கு பிறந்தநாள் வந்தது.

இந்த பிறந்தநாள் விழாவின் போது இயக்குனர் பிரசாந்த் நீல் உருது மொழியில் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இது கன்னட ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், கேஜிஎஃப் படத்துக்கு பிறகு தொடர்ந்து பிரசாந்த் நீல் தெலுங்கு படத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருவதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தார்கள். இதன் காரணமாகத்தான் பிரசாந்த் நீல் சோசியல் மீடியாவை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.