மனைவி வேண்டுமென்றே பாலியல் உறவை மறுப்பது கணவனை கொடுமைப்படுத்துவதாகும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருமணம் ஆன புதிதில் மனைவி வேண்டுமென்றே பாலியல் உறவுக்கு மறுப்பதாகக் கூறி கணவன் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மேலும், திருமணத்தில் பாலியல் உறவில் ஏற்படும் ஏமாற்றத்தைத் தாண்டி வேறு எதுவும் மோசமானது இல்லை, மனைவி வேண்டுமென்றே பாலியல் உறவை மறுப்பது கொடுமைக்குச் சமம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.