ஒவ்வொரு மாதமும் எரிபொருளின் விலை மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுமதி இறக்குமதிக்கு ஏற்றார் போல கேஸ் சிலிண்டர் விலையையும் நிர்ணயம் செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக வீட்டு சிலிண்டர் விலை 1118.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென்று மத்திய அரசு அதில் 200 ரூபாயை குறைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 300 வரையிலும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய அமைச்சர்  ஷிர்பாத் ஒய் நாயக்ல் எல்பிஜி சிலிண்டர் நிரப்புவதற்காக முதலமைச்சர் நிதி உதவி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரை 428 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம். அதாவது உஜவாலா திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு தாரர்கள் மத்திய அரசின் 200 ரூபாய் தள்ளுபடி மற்றும் 275 மானியத்தின் படி சிலிண்டர் விலையை 428 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.