ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பபானது ஊழியர்களுக்கான ஓய்வு கால சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாக  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மாதந்தோறும் ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களின் சார்பாக 12% தொகையானது PF அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு வசதிகளும் PF  அக்கவுண்டின் மூலமாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி குறைக்க நிதித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நிதியாண்டின் நிதி உபரியை அண்மையில் மதிப்பிட்டபோது, EPFO நஷ்டம் அடைந்தது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து PF மீதான வட்டி விகிதத்தை மறுஆய்வு செய்து 8%க்கும் கீழ் கொண்டு வர நிதித்துறை செயலகம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகிறது. 2021-22ம் நிதி ஆண்டில் இருந்து வட்டி 8.10% ஆக உள்ளது