தமிழக சட்டப்பேரவையில் நேற்று தவெக அரசு தாக்கல் செய்துள்ள நடப்பாண்டுக்கான முதல் மாநிலப் பொது நிதிநிலை அறிக்கை பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பொதுமக்களின் அதீத எதிர்பார்ப்புகளுக்குப் சற்றும் சம்பந்தமில்லாமல் இந்த பட்ஜெட் முற்றிலும் காலியாகவே வந்துள்ளதாக அவர் சாடியுள்ளார். மாநிலத்தின் எதிர்காலத் தொழில்துறை வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் போன்ற எந்தவொரு தொலைநோக்குப் பார்வையும் இந்தத் திட்டங்களில் இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முந்தைய அரசு திட்டங்களுக்குத் தங்களது தலைவர்களின் பெயர்களைச் சூட்டியது போல, தற்போது தவெக அரசு அறிவித்துள்ள திட்டங்களில் கிட்டதட்ட 150 திட்டங்களுக்கு ‘வெற்றி’ என்ற பெயரையே சூட்டியுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், ஓரிரு திட்டங்கள் மட்டுமே அம்பேத்கர் மற்றும் காமராஜர் பெயர்களில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதித் தொகையும் மிகவும் பெயரளவிலேயே உள்ளது என்று சாடியுள்ள அவர், உதாரணத்திற்கு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு வெறும் 250 கோடி ரூபாயும், மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு வெறும் 10 கோடி ரூபாயும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

“>

 

புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படும் ஒரு நவீன மருத்துவக் கருவியின் விலையே 10 கோடி ரூபாயைத் தாண்டும் சூழலில், இந்த நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல என்று தமிழிசை கடுமையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.