ஆந்திர மாநிலத்தில் உள்ள அமலாபுரத்தில் பில்லி துர்கா ராவ்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேட்டரிங் வேலை பார்க்கிறார். இவரும் ஹைதராபாத் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கும் சுஷ்மிதா(23) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். திருமணம் செய்யாமலேயே இருவரும் விசாகப்பட்டினத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த இருவரும் வீட்டில் இருந்த டிவி ரிமோட், டீ குடிக்கும் கப், கண்ணாடி பொருட்கள் ஆகியவற்றை உடைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து இருவரும் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.