வடக்கு துருக்கியில் கடந்த 12ம் தேதி திங்கட்கிழமை அன்று மசூதியில் தொழுகை நடந்துள்ளது. அதன் பிறகு 5 பேர் அருகில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர். இந்நிலையில் அங்கு வந்த 18 வயதான சிறுவன் ஒருவன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கு இருந்தவர்களை தாக்கியுள்ளார். இந்த சிறுவன் கத்தி, கோடாரி, புல்லட் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததோடு ப்ரூஃப் ஆடையும் அணிந்திருந்தார். அதோடு அவரது சட்டையில் கேமரா ஒன்றை பொறுத்திருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதை அறிந்த அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் படுகாயமடைந்த 5 பேரை காவல்துறையினர் மருத்துவமனைக்கு சிகிக்சைக்காக அனுப்பி வைத்தனர். அதில் 2 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு காவல் துறையினர் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர் இந்த தாக்குதல் நடத்தியதை சமூக ஊடகங்களில் நேரிலை ஒளிபரப்பு செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. மேலும் இவர் வீடியோ கேமின் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.