பிரதமர் மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நெல், உளுந்து,துவரம் பருப்பு மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனைப் போலவே பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த 89 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதன்படி ஒரு குவிண்டால் நெல்லுக்கான MSP ரூ.2,182 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இருந்த விலையை விட ஏழு சதவீதம் அதிகம். அதனைப் போலவே ஏ கிரேடு நெல்லுக்கான MSP குவின்டாலுக்கு ரூ.2,203 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.