தமிழகத்தில் குறுவை பருவ  சாகுபடி முடிந்து சம்பா பருவநெல் சாகுபடி காலம் தொடங்கியுள்ளது. சம்பா பருவத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 13 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற உள்ளது. ஆனால் ஆற்றுப் பாசனத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தால் பயிர் சாகுபடியை தொடங்க முடியாமல் விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க நிலத்தடி நீர் ஆதாரமும் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகள் சாகுபடி செய்ய தொடங்கியுள்ளார்கள்.

அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை பெய்யாமல் போனால் பயிர்கள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்தால் இந்த இழப்பீட்டை சமாளிக்கலாம். எனவே அவர்களுக்கு பயிர் காப்பீட்டை கட்டாயமாக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக மொத்த சாகுபடி பரப்பில் ஐந்து சதவீதம் பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படும். ஆனால் இந்த முறை கூடுதலாக பயிர் காப்பீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இதற்காக 2300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.