நடிகர் ஜீவா ஒரு காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தார். அண்மையில் அவரது நடிப்பில் வெளியான எந்த படமும் வெற்றி பெறவில்லை. இப்போது வெற்றி பாதைக்காக கடுமையாக முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் அவரது கேரியரில் முக்கிய திரைப்படம் சிவா மனசுல சக்தி. இது டைரக்டர் எம்.ராஜேஷின் முதல் திரைப்படம்.
இத்திரைப்படத்தின் 2-ஆம் பாகத்தை எடுக்க தற்போது ஜீவாவும், ராஜேஷும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எம்.ராஜேஷ் இப்போது நடிகர் ஜெயம் ரவி, பிரியங்கா மோகனை வைத்து படம் டைரக்டு செய்து வருகிறார். இப்படத்தை முடித்தபின் சிவா மனசுல சக்தி படத்தின் 2ஆம் பாகம் படப்பிடிப்பு தொடங்கும். இந்த படத்தை ஜீவா தன் சொந்த தயாரிப்பில் தயாரிக்க உள்ளார். விரைவில் இதுபற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.