திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குள்ளாப்பாளையம் பகுதியில் நாகராஜ்(44)- ஆனந்தி(38) தம்பதியினர் தங்களுடைய 12 வயது மகள் தீட்சையாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் பாலத்தின் மீது சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நாகராஜ், ஆனந்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தீட்சையாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான தம்பதியினர் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சிறுமி தீட்சையாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இதனை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த தம்பதியினருக்கு தலா மூன்று லட்சமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு தலா ஒரு லட்சமும் நிதி உதவி வழங்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டார்.