உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை 32வது சீசன் இன்றுடன் நிறைவடைய இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் இன்று நடக்க இருக்கும் இறுதிப் போட்டியில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணி மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகா அணியை எதிர்த்து விளையாடுகிறது.

மதியம் 1:30 மணிக்கு தொடங்க இருக்கும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை எந்த அணி வெல்லப் போகிறது என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.