தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய்‌. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் படத்தின் முதல் 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று படக்குழுவினர் 3-வது பாடலை வெளியிட்டனர். இந்த பாடலில் நடிகர் விஜய்யை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் காண்பித்துள்ளனர். அவருடைய முகம் கூட அடையாளம் தெரியாத அளவுக்கு அந்த பாடலில் டி ஏஜிங் தொழில்நுட்பம் செய்யப்பட்டுள்ளதாக பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல் தி கோட் படத்தின் 3-வது பாடலை விமர்சித்துள்ளார். அதாவது கோட் படத்தில் ஏராளமான நடிகர்கள் நடிக்கப் போகிறார்கள் என்றும், விஜயகாந்த் ஏஐ தொழிநுட்பத்தின் மூலம் கொண்டுவரப் போகிறார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் யுவன் சங்கர் ராஜா 3 பாடல்களின் மூலம் முடித்து வைத்து விட்டார். அவர் பாவம் விஜய். மொக்கை டெக்னாலஜி என்று ட்வீட் போட்டு கலாய்த்துள்ளார். மேலும் அஜித்குமார் இந்த நேரம் வெங்கட் பிரபுவுக்கு இதற்காகத்தான் கை கொடுக்கல என்றும் வடிவேலுவின் புகைப்படத்தை பகிர்ந்தும் அவர் கலாய்த்துள்ளார்.