
கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ட்ரெயின். விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் துவங்கியுள்ளது. ஒரு நாள் இரவு ரயிலில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று 47வது பிறந்த நாளை கொண்டாடும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக படக்குழு ட்ரெயின் படத்தின் சிறப்பு கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.