கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தர்ஷன். இவரை மைசூரில் வைத்து தற்போது காவல்துறையினர் அதிரடியாக  கைது செய்துள்ளனர். அதாவது ரேணுகா சுவாமி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் சிலரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் நடிகர் தர்ஷனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் அவரை கைது செய்துள்ளனர். அவருடைய வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இளைஞர் கொலை வழக்கில் நேரடியாக தர்ஷன் ஈடுபட்டாரா அல்லது மறைமுகமாக செயல்பட்டாரா என்பது குறித்து தொடர்ந்து விசாரணைநடைபெற்று வருகிறது