டைரக்டர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் “வாரிசு” படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. வருகிற 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அத்துடன் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகிபாபு உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் வாரிசு படத்தின் டிரைலர் இன்று (ஜன,.2) ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பதில் ஜனவரி 4ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக டிரைலரை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. நாட்கள் தள்ளிப் போவதால் தரமான டிரைலர் வர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.