தளபதி விஜய் நடித்திருக்கும் வாரிசு படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகிபாபு உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்து உள்ளார். வாரிசு திரைப்படம் நேற்று அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி வெளியாகியது.

இது குடும்ப உறவுகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள கமர்ஷியல் திரைப்படம் ஆகும். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யை வாரிசு பட டைரக்டர் வம்சியும், தயாரிப்பாளர் தில்ராஜும் சந்தித்துள்ளனர். இது தொடர்பாக வம்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வாரிசு கொண்டாட்டம். நண்பா மற்றும் நண்பி நீங்கள் காட்டக்கூடிய அன்பிற்கு நன்றி. அத்துடன் நன்றி விஜய் சார்” என தெரிவித்துள்ளார்.