தல அஜித் நடிப்பில் ரிலீஸ் ஆகியுள்ள படம் “துணிவு”. இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது. அஜித்-ஹெச்.வினோத் கூட்டணியில் வெளியாகியுள்ள இந்த படம் நடப்பு ஆண்டின் முதல் ப்ளாக் பஸ்டராக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இப்படம் வசூலிலும் மாபெரும் அளவில் வரவேற்பை பெரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் வட அமெரிக்காவில் இந்த படம் ப்ரீமியர் 207 இடங்களில் செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் மட்டுமே $229,051 வரை வசூல் செய்து புது சாதனை படைத்துள்ளது துணிவு. மேலும் இப்படம் தான் வட அமெரிக்காவில் ப்ரீமியரில் அதிக வசூல் செய்து அஜித் திரைப்படம் என்ற புதிய மையில் கல்லையும் எட்டி உள்ளது. விரைவில் $250K வரை இந்த படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.