உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதில் தினம்தோறும் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு புது புது அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. பொதுவாக வாட்ஸப்பில் எந்த ஒரு மூலையில் இருக்கும் உறவினர் மற்றும் நண்பர்களிடம் பேசுவது எளிதாகி விட்டது. எவ்வாறு நீங்கள் பேசும் நபர் வேறு மொழியை பேசுபவர் என்றால் அவருடன் பேசுவது கடினமாகி விடுகின்றது. அதிர்ஷ்டவசமாக whatsapp செயலியில் மொழிமாற்றம் செய்யக்கூடிய புதிய அம்சம் காணப்படுகின்றது.

இதில் காணப்படும் மொழிமாற்ற அம்சத்தை பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கு விருப்பமான தகவல்களை வேறு மொழியில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்ப முடியும். வாட்ஸ் அப்பில் நீங்கள் அனுப்பும் தகவலை வேறு மொழியில் மாற்றம் செய்வதற்கு முதலில் whatsapp செயலியை திறந்து புதிய மெசேஜ் ஒன்றை டைப் செய்ய வேண்டும், டைப் செய்த மெசேஜை ஆழமாக அழுத்த வேண்டும்,

பின்னர் ஒரு மெனு தோன்றும் வரையில் ஆழமாக அழுத்த வேண்டும். அதில் more என்றும் அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும். அதில் காணப்படும் டிரான்ஸ்லேட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து உங்கள் தகவல் மொழிமாற்றம் செய்யலாம். நீங்கள் விரும்பும் மொழியில் அந்த தகவல் மொழிமாற்றம் செய்யப்படவில்லை என்றால் உங்களுக்கு தேவையான மொழியை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.